Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… கணவர் எடுத்த விபரீத முடிவு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கருவாடு மண்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக அங்கு சென்று வீட்டிற்கு தனது மனைவியான தீபாவை அழைத்துள்ளார். அதற்கு தீபா வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மணிகண்டன் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தீபா தனது கணவர் இறந்து செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்ற தீபா கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது என தனது மாமனாரான கிருஷ்ணமூர்த்தியின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தீபா மற்றும் கிருஷ்ணமூர்த்தி உறவினர்கள் மருத்துவமனையில் மணிகண்டனின்  உடலை பெறுவதற்காக இருந்துள்ளனர். அப்போது தீபாவின் தம்பியான தீபன் ராஜ், அவரின் நண்பரான மதன்குமாருடன்  அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தனர்.

இதனையடுத்து  கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் சிலர் அங்கு சென்று திடீரென தீபன் ராஜ் மற்றும் மதன்குமாரை தாக்கியுள்ளனர். இதனை அறிந்த தீபா மற்றும் அவரின் உறவினர்கள் இணைந்து அப்பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தீபா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது என காவல்நிலையத்தில் தனது மாமனாரின்மீது புகார் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த தனது மாமனாரின் உறவினர்கள் சிலர் சென்று தனது தம்பி மற்றும் அவரின் நண்பரை தாக்கியதால் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தனது மாமனாரான கிருஷ்ணமூர்த்தியின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அப்போது காவல்துறையினர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |