Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை… ‘மாஸ்டர்’ பிரபலம் போட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

சமூக வலைதள பக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன் ‘எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை’ என பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியானது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை திரையரங்கில் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் . சிறப்பான பொங்கல் விருந்தாக மாஸ்டர் படம் அமைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர் .

மகேந்திரன்

‘மாஸ்டர்’ படத்தில் இளம் விஜய் சேதுபதியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மகேந்திரன் . இளம் வயதில் விஜய்சேதுபதி எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்ற பிளாஷ்பேக்கில் இவர் நடித்துள்ளார் . இதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மகேந்திரனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |