Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு தாங்க… அண்ணனின் செயலால் தம்பிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தம்பியை, அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரவணன் மற்றும் ராமன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தை இரண்டு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது இளைய மகனான ராமனுக்கு பிரித்துக் கொடுத்த நிலத்தில் 5 சென்ட் நிலத்தை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து ஒரு லட்சத்தை ராமனிடம் கொடுத்து விட்டு இரண்டு லட்சத்தை சண்முகமே வைத்துக்கொண்டார்.

இதனையடுத்து ராமன் தனது தந்தையிடம் மீதமுள்ள பணம்  எனக்கு வேண்டும் என்று கேட்டபோது அவரின் அண்ணனான சரவணன் எதற்கு தந்தையிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சரவணன் தம்பி என்று கூட பாராமல் அங்கிருந்த கட்டையை எடுத்து ராமனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ராமன் பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்த அவரின் தந்தை அதிர்ச்சி அடைந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் அங்கு ராமனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராமனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பி என்று கூட பாராமல் அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |