Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு உடல்நிலை சரியில்லை’… பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றவர் ஆரி. இந்த சீசனின் டைட்டில் வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆரிக்கு கோடிக்  கணக்கில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஆரியை நேரில் சந்திக்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதில் ‘உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தேன் . ஆனால் எனக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடை பெற்ற நாளில் இருந்தே உடல்நிலை சரியில்லை , இன்னும் சரியாகவில்லை ‌. சீக்கிரம் உங்களை சந்திக்க வருவேன் . அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . வெகு விரைவில் உங்களை சந்தித்து உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன். இது என்னுடைய வெற்றியல்ல நேர்மைக்கும், உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி . ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என் அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |