Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப் தான்’… பிக்பாஸுக்குப் பின் பாலாஜியின் முதல் பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . இந்த சீசனில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர். இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதில் ‘இந்த அற்புதமான பயணத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி . நான் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போது என் நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் எனக்கு துரோகம் செய்தனர். ஆனால் நீங்கள்தான் எனக்கு தூணாக இருந்தீர்கள் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் . எனக்கு எந்த வருத்தமும் இல்லை,  சந்தோஷத்துடன் இந்த 105 நாட்களை அனுபவித்தேன் . எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப் தான்’ என பதிவிட்டுள்ளார் ‌. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |