Categories
தற்கொலை தேசிய செய்திகள்

எனக்கும் குடும்பம் வேண்டும்… தனிமையில் வாடிய வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பதியில் குடும்பம் இன்றி வசித்து வந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில்  24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் சித்தலசேனு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். அவர் அங்கு நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் போல எனக்கும் ஒரு குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் தனிமையில் வாடுகிறேன் என்று கூறி வருத்தம் அடைந்தார்.

அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் வீடு திரும்பினார்.அப்போது அவர் நண்பர்கள் அவருக்கு போன் செய்துள்ளார்கள்.ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் என தகவல் வந்துள்ளது.உடனடியாக அவரது நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தற்கொலை செய்து கொண்டவர் யார், எந்த ஊர்? என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |