Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு முடி வெட்டுங்க” இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் நடவடிக்கை….!!

சலூன் கடையில் வாலிபருக்கு முடிவெட்ட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஊனத்தூர் கிராமத்தில் சிறுவாச்சூரை சேர்ந்த லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் முடி வெட்டுவதற்காக லோகநாதன் கடைக்கு வந்தார். அப்போது உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி வெட்ட முடியாது என்று லோகநாதன் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதனை அறிந்த கடை அமைந்துள்ள கட்டிட உரிமையாளர் அன்னக்கிளி மற்றும் பழனிவேல் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பூவரசனிடம் உங்களுக்கு முடிவெட்ட முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பூவரசன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பூவரசனுக்கு முடி வெட்ட மறுத்து சலூன்கடை உரிமையாளர் லோகநாதன், அன்னக்கிளி, பழனிவேல் போன்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்துள்ளார்.

Categories

Tech |