Categories
உலக செய்திகள்

“என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது”…. அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?….. பேட்டி கொடுத்த ஹென்றி கெவில்….!!!!

டேனியல் கிரெய்க் 5-வது முறையாக ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்துள்ள படம் “நோ டைம் டு டை” ஆகும். இது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில் உருவான 25-வது படமாக இருக்கிறது. இதுவே ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்கும் கடைசி படம் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இத்ரீஸ் எல்பா, டேரியஸ் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி ஆகியவர்களில் ஒருவர் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக டிசி காமிக்ஸ் படங்களில் சூப்பர் மேனாக நடித்து வரும் ஹென்றி கெவில் பெயர் உச்சரிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஹென்றி கெவில் விளக்கம் அளித்தபோது “தற்போது நான் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என்னை விட வயது குறைவான நடிகரின் பெயரை தயாரிப்பாளர் பரிசீலனை செய்யலாம். ஆகவே இந்த விஷயத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது என்றாலும், ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிப்பதை நான் மகிழ்ச்சியாக நினைக்கின்றேன்.

Categories

Tech |