Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்னால தாங்க முடியல…. விரக்தியில் தந்தையின் முடிவு…. வேலூரில் சோகம்….!!

மகனை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மகன் ராணுவத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் அவரது நண்பரைப் பார்ப்பதற்காக மேல்பாடி அருகில் உள்ள திகுவப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு மகனை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் இருந்ததால் ஸ்ரீதர் அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஒரு புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீதர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |