நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “எனது இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022