Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனது மனுவை வாங்காமல் சென்று விட்டார்” அதிகாரியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7-வது மாடியில் கனிம வள உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வந்தார். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் முகிலனிடன் இருந்த மனுவை வாங்க மறுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். இவ்வாறு அதிகாரி மனுவை வாங்காமல் சென்றதை பார்த்து முகிலன் உதவி இயக்குனர் அலுவலக நுழைவு வாயிலிலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகிலனிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின் அலுவலக புவியியலாளர் மற்றும் ஊழியர்கள் முகிலனிடம் வருத்தம் தெரிவித்து அந்த மனுவை பெற்றுக்கொண்டனர். அதன்பின் முகிலன் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதற்கு முன்பாக முகிலன் போராட்டத்தில் கூறியதாவது “இந்த மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று செயல்படும் குவாரிகள், கல் உடைக்கும் இடங்கள் போன்ற விபரங்களை தனக்கு வழங்க வேண்டும். மேலும் குவாரி உள்ளிட்டவைகள் பெற்றுள்ள அனுமதிக்கான நாட்கள் அடங்கிய விபரங்களை கேட்டு, தகவலறியும் உரிமைச்சட்ட மனுவாக வழங்க வந்தேன். ஆனால் அதிகாரி எனது மனுவை வாங்காமல் எழுந்து சென்றுவிட்டார். இதனால் நான் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |