ராபர்ட் மாஸ்டர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன்.
தமிழ் சினிமாவில் நடனத்தால் ஹிட்டான பாடல்கள் நிறையுள்ளது. அப்படிப்பட்ட பாடலை விஜய், சிம்புவை வைத்து கொடுத்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் இவர் கலந்து கொண்டார். பின்னர் நிறைய பிரபலங்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் கூறினார்.
ஆரம்ப கட்டத்தில் நன்றாக தான் விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவரது கவனம் ரச்சிதா மீது திரும்பவும் விளையாட்டிலிருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
எனவே மக்கள் அவரை பிக் பாஸ் ஹவுஸிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் பேட்டி கொடுத்து வந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ” நான் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு குயின்ஸி என்ற பெயரை தான் வைப்பேன். குயின்ஸியை நிஜமாகவே எனது மகளாக தான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எனது காதலி மூக்குத்தி போட்டிருப்பார்கள் எனவே ரச்சிதாவும் போட்டிருந்ததால் நான் அவரே பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.