ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த 2015ஆம் ஆண்டு தான் செய்தது சரியானது என்பதை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளார்.
உலக நாடுகள் பிற நாடுகளிலிருந்து அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்பதால் தங்கள் நாட்டின் எல்லையில் தடுப்பை வைத்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சில காரணங்களால் வெளியேறிய 1 மில்லியன் அகதிகளை ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் தங்கள் நாட்டிற்குள் வரவேற்றுள்ளார்.
இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களால் ஏஞ்சலா மெர்கலாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஜெர்மனி நாட்டிற்குள் தஞ்சம் புகுந்த சுமார் 1 மில்லியன் அகதிகளால் அந்நாட்டில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை.
இதனையடுத்து சுமார் 6 வருடங்கள் கழிந்தும் கூட ஜெர்மனியில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அகதிகளால் எந்தவித பிரச்சனையும் வராததால் தான் செய்த மனிதாபிமான செயல் மிகவும் சரியானதே என்பதை ஏஞ்சலா மெர்க்கல் அனைத்து நாடுகளுக்கும் நிரூபித்து காட்டியுள்ளார்.