Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 நாட்களில் முடிவு… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா என இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார்.

தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ” பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவ, மாணவியர்கள் இடையே இருவேறு கருத்து நிலவுகின்றது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசனை செய்து முடிவெடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்”.

Categories

Tech |