தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.
தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 1400 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேலும் நாளை காலை 6 மணி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஊரடங்கு வாபஸ் பெற்றப்படுவதாக தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.