Categories
உலக செய்திகள்

இனி இவர்களுக்கு விதிவிலக்குகள் கிடையாது..! பேஸ்புக் எடுத்துள்ள அதிரடி முடிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகளுக்கென கொண்டுவரப்பட்ட விதிவிலக்குகள் தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பிரபல வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக திகழ்கிறது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு விதிவிலக்குகளை அளித்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் அரசியல்வாதிகள் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது வன்முறையை தூண்டும் விதமாக இருந்தாலும் கூட அவை அனைத்தும் ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையதாக கருதப்படுகிறது என்ற கொள்கையை கடந்த 2016-ல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கொண்டுவந்துள்ளார்.

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தையடுத்து காலவரையறையின்றி முடக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கை என்ன செய்வது என்பது குறித்து பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மார்க் ஜூகர்பெர்க் கொண்டுவந்த அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்கை முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்காவில் உள்ள பிரபல ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று மறுத்துள்ளது.

Categories

Tech |