Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”பிரிட்டன் எடுத்த முடிவு” – உலகமே எதிர்பார்ப்பு …!!

கொரோனா தடுப்பூசியை நாளை முதல் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் முன்னின்று நடத்துகின்றது. இங்கிலாந்து அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில் கொரோனா வைரசை குணப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை வியாழக்கிழமை முதல் மனிதனுக்கு செலுத்தி சோதனை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்து உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல கடந்த வாரம் அதிவேமாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தன. தற்போது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது என்ற தகவல் உலக நாடுகளின் பார்வையை பிரிட்டன் பக்கம் திருப்பியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் நிருபர்களிடம் கூறும் போது, பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு நடத்தும் மருத்துவ பரிசோதனைகளுக்கு 20 மில்லியன் பவுண்டுகளும், லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு 22.5 மில்லியன் பவுண்டுகளும் நிதி வழங்கும் என்று தெரிவித்தார்.

மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் சோதனை செயல்முறைகளை குழு வேகமாக சோதனை நடத்தியதன் விளைவாக ஆக்ஸ்போர்டு திட்டத்தின் தடுப்பூசி நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும். கொரோனா வைரஸ் உலகளவில் ஒரு சக்திவாய்ந்த எதிரி. ஆனால் மனித அறிவின் சக்தி அதை விட வலுவானது. நீண்ட காலத்திற்கு கொரோனா வைரஸைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழியாக இந்த தடுப்பூசி இருக்கும் என்று நம்புகின்றேன் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த தகவல் கடந்த ஒரு மாதமாக கண்ணீரில் இருக்கும் உலக நாடுகளின் மகிழ்ச்சியை பெருகவைத்துள்ளது.

Categories

Tech |