Categories
அரசியல்

முடிவாகியது அதிமுக + தேமுதிக கூட்டணி…… கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு ….!!

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தமாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக நீண்ட இழுபறி_க்கு பின்பு  அதிமுக-தேமுதிக கூட்டணி  இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான இரண்டு கட்சிகளுக்கு -மிடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற இந்த தொகுதி உடன்பாட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.

Image result for அதிமுக + தேமுதிக

அதே போல தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் , பொருளாளர் பிரேமலதா , துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தொகுதி உடன்பாட்டில் அதிமுக, தேமுதிக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணியாக போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தமாகியுள்ளது  .

Image result for ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்த்

தொகுதி உடன்பாடு ஒப்பந்தமாகி இறுதி செய்யப்பட்ட பிறகு  முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் , பாரளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் வருகின்ற 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தேமுதிக அதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |