Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்தியாவின் 5G சேவை…. இதோ முக்கிய விபரங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்று முதல் இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். மேலும் 6வது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் துவங்கி வைக்கிறார். முதலாவதாக முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக இருக்கிறது. இதையடுத்து அடுத்த சில வருடங்களில் இச்சேவை நாடு முழுதும் துவங்கப்படும். அதிவேக இணையச் சேவையானது புது பொருளாதார வாய்ப்புகள், சமூகநன்மைகள், நாட்டிற்கு மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2035 ஆம் வருடத்தில் 5G-ன் விளைவுகளின் மொத்த செலவு $450 பில்லியன்களை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது சீனாவுக்கு அடுத்த படியாக 2வது பெரிய ஸ்மார்ட் போன் சந்தையான இந்தியாவின் தொழில்நுட்ப நிலப்பரப்பை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் 2வது பெரிய ஸ்மார்ட் போன் சந்தை ஆகும். ஆகையால் தொழில்நுட்பத்தில் அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் 5G நெட்வொர்க் குறித்த முக்கிய விபரங்கள்:

# 5G வேகம் 4G வழங்கும் வேகத்தைவிட பன்மடங்கு வேகமாக இருக்கும். அதுமட்டுமின்றி இது எந்த தாமதமும் இன்றி இணைப்பை வழங்கும். இணைக்கப்பட்ட பில்லியன் கணக்கான சாதனங்கள் உடனடியாக தரவைப் பரிமாறிக்கொள்வதையும் இது சாத்தியமாக்கும்.

# வேகமான இணையத்திற்கான சிறு மற்றும் நடுத்தர வணிகர்களிடம் இருந்து புது யோசனைகளை ஊக்குவிக்கும். இது டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைவதற்கு உதவும் என நம்பப்படுகிறது.

# இ-ஹெல்த், மொபைல் கிளவுட்கேமிங், இணைக்கப்பட்ட வாகனங்கள், அதி வேக ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் மெட்டாவர்ஸ் அனுபவங்களுக்கான தீர்வுகள் 5G வாயிலாக சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# ரிலையன்ஸ் ஜியோ, பார்திஏர்டெல், கௌதம் அதானியின் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா அனைத்தும் 5-ஜி ஏலத்தில் மொத்தம் ரூபாய்.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுத்தது.

# இண்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, மெஷின்-டு-மெஷின் கம்யூனிகேஷன், எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்றவற்றை இது சாத்தியமாக்கும் என்பது இதன் எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் ஒன்று.

# 5G தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்காக, DoTஆனது IITகள், IISc பெங்களூரு மற்றும் SAMEER உடன் இணைந்து சோதனைப்படுக்கையை நிறுவியது.

Categories

Tech |