இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இதனிடையில் வழக்கம்போல் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை டிசம்பர் 27 முதல் ஜனவரி 5-க்கு பதிலாக, இன்று முதல் ஜனவரி 7 வரை சண்டிகர் கல்வித்துறை நீட்டித்துள்ளது.
ஜனவரி 8-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் தான் ஜனவரி 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். எனினும் அட்டவணைப்படி தேர்வுகள் தொடரும். தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களும் தங்கள் வேலையை தொடர்வார்கள். தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலும் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் 2 தனியார் பள்ளிகளின் இரண்டு மாணவர்களுக்கும், ஒரு அரசு பள்ளி மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.