தீபாவளியை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலேயே வெளியாகிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த, சிம்புவின் மாநாடு, சூரியாவின் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் மற்றொரு படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஷங்கர் இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.