‘எனிமி’ படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் ,ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’ . நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இந்தப் படத்தில் எதிரிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தை அரிமா நம்பி ,நோட்டா ,இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார் . இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது .
ஆனால் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார்? என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில் எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் தமிழில் சிவப்பதிகாரம், தடையறத்தாக்க ,குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .