Categories
கல்வி

“எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம்” நடனமாடி அசத்திய ஆசிரியை…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள்.

அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துவது தான். இந்த திட்டமானது மாவட்டம் தோறும் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்தின் பாடலை மாணவர்களுக்காக போட்டு அந்த பாடலுக்கு ஏற்றவாறு ஒரு ஆசிரியை சிறப்பான முறையில் நடனமாடி இருப்பார்.

இது தொடர்பான வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் ஆசிரியை நடனமாடும் வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில்  3-ம் வகுப்பும் படிக்கும் அரசு பள்ளி சிறுமி உடல் பாகங்களை அழகாக ஆங்கிலத்தில் விவரிக்கும் வீடியோவும் இணையதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |