ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் எதிர்ப்பு சக்தியை பெருக்கி ஓரளவு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் ஏ ,பி, சி ,டி மற்றும் புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் பழங்கள், கிழங்குகள், புதினா போன்றவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு உடலில் ரத்த அணுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
ஸ்ட்ராபெரி காலிஃப்ளவர் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உதவக் கூடியவையாகும். வைட்டமின் டி சத்து மிகுந்த காய்கறிகளை வேக வைத்தோ பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.