Categories
அரசியல்

10 மாவட்டங்களில் அமல் – அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்து, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதியை தமிழக அரசு வழங்கி இருக்கின்றது.

ரூபாய் 25 ஆயிரத்து 213 கோடியில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 49 ஆயிரத்து 33 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை விரைந்து உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயமுத்தூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |