Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ENG vs IND : டி20 போட்டிகளில் ஸ்மிருதி -ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை…!!

இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி ஒரு புதிய சாதனையை  படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் எமி ஜோன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடி 55 ரன்களை சேர்த்தது.. நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி  53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79* ரன்களை அடித்து அசத்தி வெற்றி பெற வைத்தார்.. ஷபாலி வர்மா 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷிப்பின் மூலம் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

அதாவது, பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 1152 ரன்களுடன் இந்தியாவின் வெற்றிகரமான ஜோடியாக இருக்கின்றனர். அதன்படி இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 1,000 ரன்கள் பார்ட்னர்ஷிப்க்கு மேல் குவித்த ஒரே ஜோடியாக இவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  மேலும் உலகளவில் 7ஆவது அதிக ரன்களை குவித்த ஜோடியாகவும் இவர்கள் இருக்கின்றனர்..

பெண்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி :

1. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா –  1152 ரன்கள்

2. ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் – 990 ரன்கள்

3. ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் – 853 ரன்கள்

உலகளவில் பெண்கள் டி20 போட்டிகளில் ஒரு ஜோடி மூலம் அதிக பார்ட்னர்ஷிப் : 

2250 – சுசி பேட்ஸ் மற்றும் சோஃபி டிவைன் (நியூசிலாந்து)

1627 – அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி (ஆஸ்திரேலியா)

1606 – சாரா டெய்லர் மற்றும் சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து)

1517 – டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஸ்டெபானி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்)

1326 – டாமி பியூமண்ட் மற்றும் டேனி வியாட் (இங்கிலாந்து)

1303 – பிஸ்மா மஹ்ரூப் மற்றும் ஜவேரியா கான் (பாகிஸ்தான்)

1152* – ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா (இந்தியா)

 

Categories

Tech |