பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது . இதில் தொடக்க வீரரான ரிஸ்வான் பொறுமையுடன் விளையாடி 76 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார் . இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரரான ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து டேவிட் மாலன் 31 ரன்களும் ,ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் மோர்கன் தலா 21 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.