Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : தொடரை வெல்லுமா பாகிஸ்தான் ….? முதல் டி 20 போட்டி இன்று தொடக்கம் ….!!!

இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகின்றது .

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியில் 3  வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டர். இதனால் இரு அணிகளுக்கு இடையே நடந்த  3 ஒருநாள் போட்டியில்  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலானா புதிய இங்கிலாந்து அணி களமிறங்கி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் தனிமைப்படுத்துதல் முடிந்ததால் கேப்டன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 போட்டியில் களமிறங்க உள்ளது. எனவே இன்று தொடங்க உள்ள முதல்     டி 20 போட்டி நாட்டிங்காமில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.

Categories

Tech |