Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : மழையால் கைவிடப்பட்ட 3-வது ஒருநாள் போட்டி …. தொடரை வென்றது இங்கிலாந்து …!!!

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில்  இங்கிலாந்து அணி  2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான     3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது . ஆனால் 41.1 ஓவரிலே இலங்கை அணி  166 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது .

இதில் அதிகபட்சமாக டாசன் ஷனகா 48  ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும் , வோக்ஸ் மற்றும்  வில்லே தலா 2  விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆனால் அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது . இதற்கு முன் நடந்த 3 டி20 போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |