இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது . இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 241 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடி தனஞ்செய டி சில்வா 91 ரன்களும் ,ஷனகா 47 ரன்களும் எடுத்து வெளியேறினர் . இதில் இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டுகளும் ,வில்லே 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய பேர்ஸ்டோவ் 29 ரன்களில் வெளியேற , ஜேசன் ராய் 60 ரன்னில் அரைசதம் அடித்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட், கேப்டன் மார்கனுடன் இணைந்தார். இருவரின் ஜோடி இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. இதில் இருவருமே அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியாக இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஜோ ரூட் 68 ரன்களும், மார்கன் 75 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தன. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனுக்கான விருது சாம் கர்ரனுக்கு வழங்கப்பட்டது.