Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : வோக்ஸ், ஜோ ரூட் அதிரடி ஆட்டம் …. முதல் ஒருநாள் போட்டியில் …. இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி …!!!

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால்  இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 42.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் குசால் பெராரா 73 ரன்களும் , ஹசரங்கா  54 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட் , வில்லே 3 விக்கெட்  எடுத்திருந்தனர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. இதில்  தொடக்க வீரராக களமிறங்கிய  பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 9 ரன்களும் , மார்கன் 6 ரன்களும்,  மொயீன் அலி  28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை ஆடி அரைசதம் அடித்தார். இறுதியாக 34.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி  1-0 என்ற கணக்கில்  முன்னிலை வகிக்கிறது. இதில் ஆட்ட நாயகனுக்கான விருது கிறிஸ் வோக்சுக்கு வழங்கப்பட்டது.

Categories

Tech |