டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் .
டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் 17.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 85 ரன்னில் சுருண்டது . இந்திய அணி தரப்பில் ஜடேஜா ,முகமது ஷமி தலா 3 விக்கெட் கைப்பற்றினர் .இதன் பிறகு 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.ஆனால் 6.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது,” இந்த போட்டியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாடி இருக்கிறோம். இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில் 7-ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறோம். இதுபோன்ற போட்டியில் டாஸ் வென்று வெற்றி பெறுவது என்பது முக்கியமாகும் .அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று எதிரணியை 110 – 120 ரன்களுக்குள் சுருட்ட நினைத்தோம். ஆனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் குறைவான ரன்களில் சுருட்டு முடிந்தது. அதேசமயம் பேட்டிங்கில் ரோகித் சர்மா .கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
நாங்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக 8 முதல் 10 ஓவர்களில் இந்த வெற்றி இலக்கை அடைய நினைத்தோம் .ஆனால் ராகுல், ரோஹித் ஆகியோரின் சிறப்பான தொடக்கம் விரைவிலேயே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது ” என்றார். மேலும் பேசிய அவர் ,”தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட்டை இழந்ததால் மேலும் 20 பந்துகளை கூடுதலாக சந்திக்க நேரிடும் .ஆனால் எங்கள் அணி ஓப்பனர்கள் இப்போட்டியில் பயிற்சி போட்டிகளில் எப்படி விளையாடினார்களோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாட நாங்கள் ரன் ரேட்டை மனதில் வைத்து 6.3 ஓவர்களிலேயே போட்டியை முடித்து வெற்றி பெற்றுள்ளோம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.