Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… எங்க வீட்ல நாங்க இருக்கோம்… உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?…. அதிகாரிகளிடமே கேள்வி எழுப்பிய தாய்-மகள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர்.

இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக சூரிபாபு அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் சூரிபாபு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பின் சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தாய் மற்றும் மகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். எனினும் இருவரும் புரிந்துகொள்ளாமல் “எங்களது வீட்டில் நாங்கள் இருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை?” என அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையினர் காக்கிநாடா அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். பின் இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..

Categories

Tech |