தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இன்று தமிழகம் வந்தார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் பிரம்மாண்ட அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
காரில் இருந்தவாறே அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். உங்கள் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என்று கூறினார். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சுவது இல்லை என்றும் தெரிவித்தார். விரைவில் அனைவரையும் சந்திப்பதாகவும் கூறினார்.