பிரபல சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு சீரியல் தான் பொழுது போக்கு என்று கூறலாம்.
அதுமட்டுமின்றி அந்த சீரியல்களில் வரும் நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் இடத்தை பிடித்து வருகின்றனர்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனால் அந்த சீரியலில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.
இந்நிலையில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் கதாநாயகனுக்கு நண்பராக நடிந்த ரஞ்சித் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆன புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.மேலும் ரஞ்சித் நாயகி யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.