Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்… காதலனை அழைத்த காதலி இறுதியில் நேர்ந்த சோகம்.!

உசிலம்பட்டி அடுத்துள்ள துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்தவர் ஒச்சுக்காளை. இவரது 20 வயதான மகள் சினேகா. இவர் தனியார் கல்லூரியில் BA படித்து வந்தார். இந்நிலையில் மதுரை சம்மட்டியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமனை சினேகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினேகாவின் பெற்றோர் தாய் மாமன் உடனான திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும் சினேகாவின் பெற்றோர் வேறு ஒருவருக்கு சினேகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கு விருப்பமில்லை.

இதனைத்தொடர்ந்து அவர் தனது பெற்றோரிடம், தாய்மாமனை தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். மேலும் நிச்சயம் முடிந்த பிறகு தாய் மாமனுக்கு போன் செய்த சினேகா “தனக்கு வேறு ஒருத்தருடன் திருமணம் நிச்சயம் செய்து விட்டார்கள்.எனவே தன்னை உடனே இங்கிருந்து அழைத்து செல்லுமாறு” கூறியுள்ளார்.

இதற்கு தாய்மாமன் மறுப்பு தெரிவித்ததாகவும். இதனால் மனமுடைந்த சினேகா ஊருக்கு வெளியில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில் ‘என் சாவுக்கு எனது தாய்மாமன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம்’. எனது பெற்றோர் கிடையாது என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை திருமணம் செய்து கொள்ள முடியாததால் சினேகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |