நேற்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில்,டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில், கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ,ஷிவம் மாவி பவுலிங் செய்த முதல் ஓவரில் ,6 பவுண்டரிகளை அடித்து விளாசினார். இவர் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். தோல்வி அடைந்ததை பற்றி கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் கூறும்போது, எங்கள் அணியிடம் பெரிய அளவில் திறமைகள் உள்ளது.திறமைகளை மட்டும் வைத்து ,கொண்டு வெற்றி பெற முடியாது .
அந்தத் திறமைகளை செயல்படுத்திக் காட்டவேண்டும், நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம் என்றும் , விரைவில் அதிலிருந்து மீண்டு வருவோம் என்று கேப்டன் மார்கன் கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது, நான் பிரித்வி ஷாவிடம் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறியிருந்தேன். இந்த போட்டியில் நாங்கள் ரன் – ரேட் அதிகரிக்க முயற்சி செய்தோம். குறிப்பாக கடந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தோம். இதனை மாற்ற வேண்டும் என்று நினைத்து, இந்த போட்டியில் விளையாடி வெற்றி அடைந்தோம். என்று ரிஷப் பண்ட் கூறினார்.