Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்கள தொல்லை பண்ணாதீங்க ….. போலீசாருக்கு கொலை மிரட்டல் …. 5 வாலிபர்கள் கைது ….!!!

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் .

திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பகுதி சப்-இன்ஸ்பெக்டராக மூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சிஅத்திப்பேடு அருகே உள்ள  சிங்கிலி குப்பம் விளையாட்டு மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு வாலிபர்கள் சிலர் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த வாலிபர்கள் நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாகவும், எங்களை தொல்லை செய்ய வேண்டாம் என்று தகாத வார்த்தையால் பேசி  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிங்கிலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் , விஜயகுமார் , மணிகண்டன், அருண் மற்றும் சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது  விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த 5 வாலிபர்கள் மீதும் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .இதையடுத்து  திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர் .

Categories

Tech |