முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் விதமாக வாசிம் ஜாபர் வெளிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது .இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான வாசிம் ஜாபர் ,இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகனின் பழைய ட்விட் ஒன்றை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் .
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி பின்னடைவை சந்திக்கும் போது முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கடுமையாக விமர்சிக்கும் போக்கை கடைப்பிடித்து வந்தார் .இந்நிலையில் தற்போது நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 68 ரன்னில் ஆட்டமிழந்ததை வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார் . கடந்த2019-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதுகுறித்து மைக்கல் வாகன்” இன்றைய காலகட்டத்தில் ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆவதை நம்ப முடியவில்லை” என ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாசிம் ஜாபர் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
England 68 all out @MichaelVaughan 🙈 #Ashes pic.twitter.com/lctSBLOsZK
— Wasim Jaffer (@WasimJaffer14) December 28, 2021