Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களோட ஃபீல்டிங்கே’…! வெற்றிக்கு முக்கிய காரணம் …கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் …!!!

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி , 2வது வெற்றியை கைப்பற்றியது.

மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான  போட்டியில்,மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது . மும்பை அணியின் வெற்றியை பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, எங்களுடைய பவுலிங்  சிறப்பாக அமைந்ததே , எங்களுடைய வெற்றிக்கு காரணமாகும்.

நடந்த போட்டியில் நாங்கள் எடுத்திருந்த ரன்கள் ,  எதிரணியினருக்கு  சவாலாக இருந்தது. எங்களுடைய பேட்டிங்கில் மிடில் ஓவரில்  நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். குறிப்பாக பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை இறுதிக்கட்டத்தில்  வெளிப்படுத்தினார். எங்களுடைய ஃபீல்டிங் சிறப்பாக இருந்ததால் எதிரணியினரை எளிதாக தோற்கடிக்க முடிந்தது, என்று  கேப்டன் ரோகித் சர்மா  கூறினார் .

Categories

Tech |