Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களோட தொடர் வெற்றிக்கு … ‘முக்கிய காரணமே இவங்க 2 பேரும்தான்’ …! புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்…!!!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க , 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் ,3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா – ஷிகார் தவான் பார்ட்னர்ஷிப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது, எங்கள் அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் ,  பிரித்வி ஷா இருவரும் இந்த போட்டியில் ,சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். எங்கள் அணியின் தொடக்கம் சரியாக இருப்பதால் ,சிறப்பாக விளையாட முடிகிறது. குறிப்பாக இந்த தொடர் முழுவதும் ,எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடுவதால் ,நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம் என்றும், அதோடு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுகின்றனர்.  ஒவ்வொரு நாளும் புதிய விஷயத்தை கற்றுக் கொண்டு வருவதாகவும் , அது எனக்குப் பெரிதும் உதவுகின்றது என்றும் ரிஷப் பண்ட் கூறினார்.

Categories

Tech |