அரசு அளித்த கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் கிராம நிர்வாகம் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் நியாய விலை கடையில் பொது மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பணிபுரியும் ஊழியர்களிடம் அரசு அளித்த நிவாரணங்களை கேட்டபோது எந்தவித பதிலும் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் நேரில் வந்து பொதுமக்களிடம் இரண்டு நாட்களில் அரசு அளித்த நிவாரண தொகை மற்றும் 14 வகை பொருட்கள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளுக்கு கலைந்து செல்லுமாறு அலுவலர் அனுப்பி வைத்தார்.