Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை தவறிவிட்டோம்” …. தோல்விக்கு காரணம் இதுதான் ….! ரோகித் சர்மா வருத்தம் ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா வருத்தமாக பேசியுள்ளார்.

14-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது . அதோடு புள்ளிப் பட்டியலில் 4-வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது . இந்த நிலையில் நடப்பு சீசனில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது .இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது,” நாங்கள் ஆட்டத்தின் போது சில இடத்தில் தவறாக செயல்பட்டு விட்டோம். இப்போட்டியில் நாங்கள் சிறப்பாக தொடங்கியிருந்தாலும் இறுதியில் ரன் குவிக்க தவறிவிட்டோம் .

அதோடு இந்த மைதானம் ஒரு நல்ல பேட்டிங் மைதானம்.ஆனால் எங்களுக்கு கிடைத்த தொடக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை .அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் பந்து வீச்சிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை .இது போன்ற நிகழ்வு நடக்கக்கூடிய ஒன்றுதான் .அதோடு எங்கள் அணியில் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தாலும் ,  அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததுதான் ரன் குவிக்க முடியவில்லை .இப்போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |