Categories
உலக செய்திகள்

எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன் ….? பிரபல நாட்டுடன் மல்லுக்கட்டும் பாகிஸ்தான் ….!!!

பிரித்தானியாவில் சிவப்பு பட்டியலில் இருந்த இந்தியா ஆம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தொற்று அதிகமுள்ள நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்தது .அதன்படி இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் பிரித்தானியாவின்  சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது .இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, கத்தார் ஆகிய நாடுகள் பிரித்தானியாவின்  சிவப்பு பட்டியலிலிருந்து ஆம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் மட்டும்   சிவப்புப் இன்னமும்  பட்டியலில் இருந்து  வருகிறது .இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என  பிரித்தானியாவிடம் மல்லு கட்டுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய சுகாதார செயலர் Sajid Javid-க்கு பாகிஸ்தான் சுகாதார துறையை சேர்ந்த Faisal Sultan கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில் இந்தியா ,ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று  சூழலையும் ,பாகிஸ்தான் நாட்டின் கொரோனா தோற்று சூழலையும் ஒப்பிட்டு எங்கள் நாட்டில்தான் கொரோனா தொற்று  பாதிப்பும் ,உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும், மேலும் தடுப்பூசி போடுதல்  அதிகமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இதனால் எங்கள் நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன் என பிரித்தானியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |