Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களுக்கு நம்பிக்கை இருக்கு’ …..! நாங்க பெரிய அணிகளையும் வீழ்த்துவோம் – ரஷீத் கான் …!!!

டி20 உலகக் கோப்பை தொடரில்  சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதனிடையே ஓரிரு தினங்களில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் எவை எனத் தெரியவரும் .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை எடுப்போம்  என நம்பிக்கை இருந்தது .ஆனால் இந்திய அணி கூடுதலாக 30 ரன்கள் குவித்து விட்டதால் வெற்றி பெற முடியவில்லை .அதோடு இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால்  அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை .

ஒரு வேளை நாங்கள் விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தால் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்போம்  என்றார் .மேலும் பேசிய அவர் ,” ஆப்கானிஸ்தான் அணி தற்போது பெரிய அணிகளையும் தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது .ஆனால் இதற்கு கொஞ்சக் காலம் தேவைப்படலாம் .ஏனென்றால் இப்போதுதான் நாங்கள் ஒரு அணியாக மிகப்பெரிய அணிகளுடன் இணைந்து உலக கோப்பை போன்ற  பெரிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறோம். இதே போல் அதிகமாக மற்ற அணிகளுடன் தொடர்ந்து விளையாடினால்தான் அவர்களுடைய பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு எங்களால்  செயல்பட  முடியும். அதோடு எங்கள் அணி வீரர்கள் விரைவில் பெரிய அணிகளை வீழ்த்துவார்கள்  என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |