Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு ரகசிய தகவல் வந்துச்சு”… 4,000 லிட்டர் கீழே கொட்டி அழிப்பு…. போலீஸ் அதிரடி சோதனை….!!!

மலைக்கிராமங்களில் சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சில மலைக்கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின்படி, காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சக்திவேல் மற்றும் காவல்துறையினர் மலை கிராமங்களான மேல்பாச்சேரி, கீழ்ப்பாச்சேரி,  முட்டல் உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இந்த மலைகிராமங்களில் 20 பேரல்களில் சாராய ஊறல் போடப்பட்டு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனிடையில் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் அந்த 20 பேரல்களில் இருந்த 4,000 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |