Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தகவல் வந்துச்சு”…. சாக்கு மூட்டைக்குள் 21 கிலோ…. வசமா மாட்டிக்கிட்டாங்க…. போலீஸ் அதிரடி….!!!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பாப்பாகோவில் பகுதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் 3 நபர்கள் வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோதனை மேற்கொண்டனர். அதில் 10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரையும் காவல்துறையினர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி பகுதியை சேர்ந்த ரங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், தோப்புத்துறையை சேர்ந்த ஹலித் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், ராஜேந்திரன், ஹலித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |