Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கணும் …. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் …. தி.மலையில் பரபரப்பு ….!!!

முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டார பகுதியில் 111 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 106 உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகாரிகளின் உத்தரவின் படி கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது , வீடு வீடாக சென்று கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கணக்கெடுப்பபு  போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தினந்தோறும் காலை 7 மணிக்கு பணியைத் தொடங்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முக கவசம் ,சனிடைசர் போன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை .

இந்நிலையில் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு சலுகைகள் வழங்க கோரி  வசூரில் குழந்தைகள்  வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட  சுமார் 40-க்கும் மேற்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க நிர்வாகி மோகனாம்பாள் தலைமை தாங்கியுள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்த போளூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை கலைந்து போகுமாறு கூறியுள்ளனர். அப்போது மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து ஆவன  செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Categories

Tech |