என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் செயலாளர் டி.புருஷோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு தொடர்புடைய அட்டவணை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. என்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 மாணவர்களுக்கு 4 சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்படி சுப்ரீம் கோர்ட் நிர்ணயத்துள்ள காலக்கெடுக்குள் கலந்தாய்வு நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி என்ஜினியரிங் கலந்தாய்வு தேதி நவம்பர் 25ஆம் தேதி வரை நீடித்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதனை போல பிற மாநிலங்களும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்டவற்றை எடுத்துரைத்தார். அதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் என்ஜினியரிங் கலைந்தாய்வு தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.