இங்கிலாந்து வங்கியானது 3 வருடங்களுக்கும் மேலாக முதன் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. 0.25% ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக Monetary கொள்கை குழு 8-1 வாக்களித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அடிப்படியில் கடந்த வருட மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் 0.1% ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை குறைத்து விடலாம் என்ற பயம் இருந்தபோதிலும் கூட இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது .
இவ்வாறு வங்கி அடிப்படை விகிதத்தை 0.25% ஆக அதிகரித்துள்ளதால், ஒரு tracker அடமான வாடிக்கையாளருக்கான வழக்கமான மாதாந்திர திருப்பிச் செலுத்துதலில் 15 பவுண்டுக்கு மேல் சேர்க்கப்படும். ஒரு standard variable rate அடமானம் வைத்து இருப்பவர் ஒரு மாதத்துக்கு கிட்டத்தட்ட 10 பவுண்ட் கூடுதலாக செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் 2 மில்லியன் மக்கள் இந்த இரண்டு வகையான அடமான திட்டங்களில் ஒன்றைக் கொண்டு உள்ளனர். ஒமிக்ரான் மாறுபாடால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகிய உலகளாவிய சொத்துக்களின் விலைகள் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்தது. ஆனால் பின் பெருமளவில் மீண்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது.